நோக்கு
'2020 ஆம் ஆண்டாகும்போது இலங்கை மக்கள் மற்றும் இலங்கைப் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பவற்றில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பொருட்டு இலங்கையைச் சுற்றியுள்ள கடற் பரப்பில் மாசற்ற சுற்றுச் சூழல் ஒன்றினை உருவாக்குதல்.
செயற்பணி
'தற்போதுள்ள மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கடற்சூழலை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு ஏற்ற வகையில் தேவையான ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தல், சம்பந்தப்பட்ட சர்வதேச சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிதியீட்டாளர்கள், ஏனைய வளங்கள் என்பவற்றினைப் பயன்படுத்தி இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை சுற்றுச் சூழலில் கடல் மாசுறுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பவற்றிற்குத் தேவையான ஆற்றல், திறன் அமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றினைக் கொண்ட நிறுவனமொன்றாக மாறுதல்.
அதிகாரசபையின் பொறுப்புக்களும் கடமைகளும் |
||
![]() |
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் ஏற்பாடுகள் மற்றும் அச்சட்டத்தின் பிரகாரம் இயற்றப்படும் ஒழுங்கு விதிகள் என்பவற்றினை உரிய முறையில் வினைத்திறனான நடைமுறைப்படுத்தல். | |
![]() |
இலங்கைக் கடற்பரப்பில் அல்லது எதிர்பாலத்தில் அவ்வாறு இயற்றப்படும் சட்டமொன்றின் மூலம் வெளியிடப்படும் கடல் எல்லையில் கப்பல்கள் மூலம் அல்லது கடற்கரை பிரதேசங்களின் மூலம் கடல் மாசுறுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், நிருவகித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்யும் பணிகளுக்கான திட்டமொன்றினை தயாரித்தலும் செயற்படுத்தலும். | |
![]() |
இலங்கைக் கடற்பரப்பில் அல்லது அவ்வாறானதொரு சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் வெளியிடப்படும் ஏனைய கடற்பரப்பில் அல்லது இலங்கையின் முன்னைய கடற் பரப்பை அல்லது வலயங்களை முகாமைத்துவம் செய்தல், பேணிவருதல் மற்றும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். | |
![]() |
யாதேனும் எண்ணெய் வகைகள், மாசுபடுத்தும் பொருட்கள் அல்லது வேறு யாதேனும் மாசுபடுத்தும் பொருட்கள் என்பவற்றிற்கு போதிய மற்றும் பொருத்தமான பதிலீட்டு வசதிகளை ஏற்படுத்தல். | |
![]() |
இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும், ஏற்றுக்கொள்ளப்படும், இணக்கம் காணப்படும் அல்லது அனுமதிக்கப்படும் அல்லது அவ்வாறு எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய கடல் மாசுறல் தொடர்பான சகலவித சர்வதேச இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தக் கூற்றுக்களையும் ஏற்றுக்கொள்வதனை சிபாரிசு செய்தல். | |
![]() |
தேசிய எண்ணெய் மாசடைதல் தடுப்புத் திட்டமொன்றினைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல். | |
![]() |
பெற்றோலியம் அல்லது அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஆய்வு செய்தல் உட்பட இயற்கை வளங்களின் ஆய்வு செய்தல், அவ்வாறான பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய நபர்களின் தொழிற்பாடுகள் பற்றி கண்காணித்தல், முறைப்படுத்தல் மற்றும் பரீட்சித்தல். | |
![]() |
கடற் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி பல்வேறுபட்ட சமூகக் குழுக்களிடையே விழிப்பூட்டலை ஏற்படுத்தல். |
|
![]() |
மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் அல்லது அதில் ஒருசிலவற்றினை மேற்கொள்வதற்குத் தேவையான ஏனைய விடயங்களை மேற்கொள்ளல். | |
![]() |
கப்பல் சார்ந்த ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் அல்லது கரையோர நடவடிக்கைகள் மூலம் இலங்கைக் கடற் பரப்பில் ஏற்படக் கூடிய மாசடைதல் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். | |
![]() |
கப்பல் சார்ந்த ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் அல்லது கரையோர நடவடிக்கைகள் மூலம் ஏற்படக் கூடிய கடல் மாசடைதல் விடயங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளல், விசாரணைகளை நடாத்துதல் மற்றும் அவற்றிற்கு எதிராக வழக்குத் தொடரல். | |
![]() |
இலங்கை நீர்ப்பரப்பிலும் மற்றும் கடற் பிரதேசத்திலும் சூழல் மாசடைவதைத் தடுக்கும் செயற்பாட்டிற்காக, கடல் எல்லைச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அல்லது இதன் பின்னர் வெளியிடப்படுகின்ற வேறு யாதேனும் கடற்பரப்பினுள் அல்லது இலங்கையின் முன்னைய கடல் எல்லையினுள் மேற்கொள்ளப்படுகின்ற கடல் எண்ணெய் கொண்டு செல்லல் நடவடிக்கைகள் பங்கரின் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்பார்வை செய்தல். |