கடல் மற்றும் கரையோர சூழல் மாசடைவதற்கு இடமளிக்காது பாதுகாப்பது இலங்கையில் முன்னுரிமையளித்து செய்றபட வேண்டிய முக்கிய விடயமாகும். எண்ணெய்க் கசிவானது கடற் சூழலை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கக் கூடிய காரணியாகும். எண்ணெய் வசிவானது தடுக்க முடியாத ஒரு விடயமாகக் காணப்படுவதனால் சில நேரங்களில் எண்ணெய்க் கசிவின் மூலம் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
'கடல் மாசடைதல்' தொடர்பான விடயங்கள் சூழலியல் அமைச்சரின் விடயப் பொறுப்பில் உள்ளடக்கப்படும் ஒரு விடயமாகும்.
2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசடைதல் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் கடல் மாசடைவதைத் தடுப்பதுடன் தொடர்புடைய பொறுப்பு 'கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம்' ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் சிந்துதல் பற்றிய திட்டத்தை தயாரித்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தல் என்பன அந்த அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகளில் ஒன்றாகும். எதிர்பாராத எண்ணெய் கசிவு செயற்பாடொன்றின் போது செயற்பட வேண்டிய விதம் பற்றிய வழிகாட்டல் மற்றும் அச்செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டிய விதம் பற்றிய வழிகாட்டல்கள் மற்றும் அப்பணிகளை மேற்கொள்ளும் விதம் என்பன கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய எண்ணெய் கசிவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு [382KB] | ![]() |