Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு சேவைகள் எரிபொருள் வழங்கல் அனுமதிப்பத்திரம்

எரிபொருள் வழங்கல் அனுமதிப்பத்திரம்

தொகுத்துரைகள்

அனுமதிக்கப்பட்ட பன்கர் வழங்குநர் இலங்கைக் கடற்பரப்பினுள் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் அனுமதிக்கப்பட்ட எரிபொருள் வழங்கல் கம்பனியொன்று.
எரிபொருள் எண்ணெய் வழங்குநர் கடல் சூழலில் எண்ணெய், எரிபொருள் அல்லது ஏனைய எண்ணெய் கலவைகளை மாற்றுதல்.
எரிபொருள் வழங்க்ல நடவடிக்கை ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு, தரையிலுள்ள வாகனம் ஒன்றிற்கு அல்லது வேறொரு இடத்திற்கு எண்ணெய் வழங்கலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள்.
எண்ணெய் அகற்றல் கப்பல் MAR POL 73/78 இணக்கப்பாட்டின் இணைப்பு இலக்கம் 1 இன் பிரகாரம் மேற்கொள்ளப்படும் எண்ணெய் (bunker) அல்லது வேறு எண்ணெய் பெறுகின்ற கப்பலொன்று.
எரிபொருள் விநியோகக் கப்பல் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் கப்பலுக்கு எண்ணெய் வழங்கும் கப்பலொன்று.
சூடு வேலைகள் உள்ளே சூடாகும் என்ஜின் ஒன்றின் மூலம் இயக்கப்படும் கருவிகளின் பாவனை, வேல்டின் பண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பற்ற உபகரணங்களின் பாவனை, எரிக்கின்ற அல்லது ஒட்டுகின்ற உபகரணங்களின் பாவனை, தீப்பற்றக்கூடிய வாயுக கலவைகளை எரித்தல் போன்ற விடயங்கள்.

எரிபொருள் வழங்கல் நடவடிக்கைக்குப் பொறுப்பான நபர் உரிமையாளர் / இயக்குநரால் கண்காணிப்பதற்காக அதிகாரம் அளிக்கப்படும் நபர்.
கப்பல் 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசுறல் தடுப்புச் சட்டத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளதன் பிரகாரம்.

அறிமுகம்

கடலை அண்டிய சூழல் மாசடைவதைப் பாதுகாப்பதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, எரிபொருள் வழங்கும் பணியினை எண்ணெய்க் கசிவுகளற்ற முறையில் மேற்கொள்வதற்காக இந்த வழிகாட்டல் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற் பரப்பினுள் MAR POL 73/78 இணக்கப்பாட்டின் இணைப்பு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் கீழ் எரிபொருள் வழங்குதல் மற்றும் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய் மாற்றுதல் என்பன தொடர்பாகவும் இந்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கப்பல்களுக்கும் மற்றும் கப்பல்களிலிருந்தும், தரையில் இயங்குகின்ற வாகனங்கள் மற்றும் வேறு நிறுவப்பட்டுள்ளவை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற எண்ணெய்ப் பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டல்கள் இக்குறிப்பிற்கு தொடர்பில்லை. எனினும் மாற்றுகின்ற அளவினைக் கருத்திற் கொள்ளாது, இலங்கைக் கடற்பரப்பில் கப்பல்களுக்கிடையே மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்ற எண்ணெய்ப் பரிமாற்று நடவடிக்கைகள் தொடர்பாக இந்த வழிகாட்டல் ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய் வழங்குவதற்கான (Bunker supplies) அனுமதியினைப் பெற்றுக் கொடுத்தல்.

பொதுவான தேவைகள்

கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடமிருந்து செல்லுபடியான சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம் இலங்கைக் கடற் பரப்பினுள் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குதல் வேண்டும்.

இலங்கைக் கடற் பரப்பினுள் எரிபொருள் வழங்கும் பணியினை மேற்கொள்வதற்கு விருப்பமான எந்தக் கம்பனியும் தேவையான அனுமதிப் பத்திரத்தினை கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

மீளாய்வு, தேவையான அனுமதி, மற்றும் அனுமதிப் பத்திரம் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
மாசடைவதைத் தடுப்பது தொடர்பான காப்புறுதிச் சான்றிதழ் ஒன்றின் பிரதி. சுத்திகரிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படக் கூடிய சேதங்களை தடுத்தல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் செயற்பாட்டினை விளக்குகின்ற கையேடு.
அவசர சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய கையேடு.
வர்த்தகக் கப்பற் துறையினால் வழங்கப்படுகின்ற தற்காலிக அல்லது தொழில் ஆரம்ப அனுமதிப் பத்திரத்தின் பிரதி.

ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், உபகரணங்களின் தரங்கள், வாயு பரிசோதனைச் சான்றிதழ், எதிர்பாராத நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், எண்ணெய் மாற்றும் செயற்பாடு மற்றும் பாதுகாப்பற்ற செயற்பாடுகள், பாதுகாப்பற்ற நிலைகள் மற்றும் மாசடைதல் என்பன தொடர்பாக போதிய பாதுகாப்பினை வழங்கக் கூடிய ஏனைய காரணிகள் இருப்பின் அவற்றினையும் உள்ளடக்கிய எரிபொருள் வழங்கல் தொழிற்பாடு பற்றிய கைந்நூல் மேற்கூறிய மூன்றாவது ஆவணமாகும்.

அவசர சந்தர்ப்பங்களின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக அந்தக் கையேட்டில் ஆகக் குறைந்தது பின்வரும் விடயங்கள் உள்ளடக்கி இருக்கும்.
பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் பற்றிய பட்டியல்.
சகலவித வால்வ், பம்பி, கட்டுப்பாட்டு உபகரணங்கள் அதனுடன் சம்பந்தப்பட்ட திருத்த உபகரணங்கள் என்பன வைக்கப்பட்டுள்ள இடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய கப்பலின் எண்ணெய் மாற்றுகின்ற குழாய் அமைந்துள்ள இடத்தினை தெளிவாகக் காட்டுகின்ற வரைபடமொன்று.
கசிவுகள் ஏற்படுமாயின் அதனைத் தடுப்பதற்கு பயன்படுத்தக் கூடிய வழிமுறைகள்.
கடமைகள் மற்றும் பொறுப்புக்களின் தன்மைக்கேற்ப காணப்பட வேண்டிய ஆகக் குறைந்த ஊழியர்கள். (ஊழியர்களுக்கு குறித்த பணி தொடர்பாக போதிய அனுபவம் காணப்படல் வேண்டும்.)
திடீர் நிகழ்வுகளின்போது போது நிறுத்தும் விதம்.
பொதுவான மற்றும் அவசர சந்தர்ப்பங்களின் போது பயன்படுத்துகின்ற தொடர்பாடல் முறைகள்.
சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் விதம்.
முகாமையாளர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய தகவல்கள்.
கப்பல் தொடர்பான தகவல்கள், சட்ட ஆவணங்களின் பிரதிகள் உள்ளிட்ட பங்கர் கப்பல்கள் பற்றிய தகவல்கள்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் மூலம் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை திருப்தியடையும் பட்சத்தில் பங்கர் வழங்குநருக்கு ஆரம்பகட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவித்தல் வழங்கப்படும்.
இறுதி அனுமதி வழங்கும் செயற்பாடு

ஆரம்ப கட்ட அனுமதி வழங்குவது பற்றி அறிவித்ததன் பின்னர் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது அந்த அதிகார சபையினால் பெயர் குறிப்பிடப்பட்டு அதிகாரமளிக்கப்படும் மேற்பார்வையாளர் ஒருவருக்கு எரிபொருள் வழங்கும் கப்பலைப் (Bunker supply vessel) பரீட்சிப்பதற்கு அனுமதியளித்தல் வேண்டும். வர்த்தகக் கப்பற் துறைப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் கூறப்படுகின்ற ஒரு இடத்தில் எரிபொருள் வழங்கும் கப்பலைப் பரீட்சிப்பதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஏழு நாட்களுக்கு முன்னர் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும். கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் எரிபொருள் வழங்கும் கப்பலைப் (Bunker supply vessel) பரீட்சித்ததன் பின்னர் 14 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரம் ஒன்றின் மூலம் இறுதி அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும். தேவையான ஆவணங்கள் மற்றும் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் ஒன்றுடன் புதுப்பிப்பதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் சகல எரிபொருள் வழங்குநர்களும் தமது அனுமதிப் பத்திரத்தினை வருடாந்தம் புதுப்பித்துக் கொள்ளல் வேண்டும். புதுப்பிப்பதற்கான முற் தகைமையாக எரிபொருள் வழங்கும் கப்பல் கட்டாயமாக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

பயிற்சித் தேவைகள்

எரிபொருள் வழங்கும் பணியினை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக எரிபொருள் வழங்கம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான போதிய பயிற்சிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை எரிபொருள் வழங்கும் கப்பற் தலைவரினால் உறுதி செய்யப்படல் வேண்டும். தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பயிற்சி தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் அதிகாரிகளினால் கோரப்படும் சந்தர்ப்பத்தில் அவ் அறிக்கைகளைக் கட்டாயமாக அவரிடம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

எரிபொருள் வழங்கல் தொடர்பான அறிவித்தல்

ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதிக்கு முன்னர், முன்னைய மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் வழங்கல் தொடர்பான அனைத்து விபரங்களும் எரிபொருள் வழங்கும் கப்பலினால் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

இணைப்பு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் வழங்கல் பற்றிய அறிவித்தலை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி பின்வருமாறு: info@ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it இந்தக் கடிதத்தினைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை வாசிப்பதற்கு ஜாவா எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. பெக்ஸ் இலக்கம் 0112687520

எரிபொருள் விநியோகம் பற்றிய பொறுப்பு

எரிபொருள் பெற்றுக்கொள்ளும் கப்பல் ஒன்றுக்குப் பொறுப்பான நபர், எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் நிரப்புவதற்கான கட்டளையை அல்லது அதனை நிறுத்துவதற்கான அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவரை நியமித்தல் வேண்டும்.

எரிபொருள் பெறுகின்ற கப்பலில் உள்ள குறித்த பணிக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் மற்றும் எரிபொருள் வழங்கும் கப்பலின் தலைவர் தமது பொறுப்புக்களுக்கு உட்பட்ட எல்லையினுள் நிரப்பப்பட்ட எரிபொருள் நீருடன் அல்லது கடலுடன் சேர்வதை தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். அவ்வாறு எரிபொருள் நிரப்பும் காலத்தினுள் திருத்த வேலைகள் எதுவும் கப்பலில் அல்லது அதற்கு வெளியே இடம் பெறாமலிருப்பற்கு பொறுப்பாக இருத்தல் வேண்டும். எரிபொருள் நிரப்பும் வேகம் மற்றும் குழாய்களின் அமுக்கம் என்பன உரிய முறையில் காணப்படுவதாக எரிபொருள் நிரப்பும் கப்பலின் ஊழியர்கள் கண்காணித்தல் வேண்டும். மேலும் அவர்கள் எரிபொருள் நிரப்பும் பணியானது பாதுகாப்பாக நடைபெறுகிறது என்பன தொடர்பாகவும் பொறுப்புக் கூறுதல் வேண்டும். எரிபொருள் நிரப்பப்படும் முழுக் காலத்திலும் அவசர சந்தர்ப்பங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற விதத்தில் அதற்கு அண்மித்த ஒரு இடத்தில் பணியாற்றுதல் வேண்டும்.

எரிபொருள் நிரப்பும் வேகம் மற்றும் குழாய்களின் அமுக்கம் என்பவற்றினை உரிய முறையில் பேணி வருதல், எரிபொருள் வழங்கும் கப்பலுக்கு போதிய முன் அறிவித்தல் இன்றி எரிபொருள் வடிந்தோடுவதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் எந்தவொரு வால்வ்வையும் மூடாதிருப்பதற்கு எரிபொருள் நிரப்பும் கப்பலுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கையெடுத்தல் வேண்டும். பாதுகாப்பான முறையில் எரிபொருள் வழங்கப்படும் அதே நேரம் அவசர சந்தர்ப்பங்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய விதத்தில் எரிபொருள் நிரப்பும் காலத்தினுள் அதனைக் கண்காணிப்பதற்கு கப்பலின் பணியாளர்கள் அதற்கு அண்மித்த ஒரு பிரதேசத்தில் பணியாற்றுகின்றனர் என்பது பற்றி, எரிபொருள் நிரப்பப்படும் கப்பலின் தலைவர் / பிரதான பொறியியலாளர் உறுதி செய்தல் வேண்டும்.

பாதுகாப்புத் தன்மையினை உறுதிசெயவதற்கான் பரீட்சித்தல் பட்டியல் எரிபொருள் வழங்கும் கப்பலின் மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் கப்பலின் தலைவர்கள் 'பங்கர் தகைமை பரீட்சித்தல் பட்டியலை' பூர்த்தி செய்தல் வேண்டும்.

எண்ணெய் சிந்துதல், கசிவு மற்றும் ஏனைய பாதுகாப்பற்ற தன்மைகள் தொடர்பாக போதிய பாதுகாப்பினை பரீட்சித்தல் பட்டியல் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். பரீட்சித்தல் பட்டியலின் மாதிரிப் பட்டியல் இணைப்பு (2) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கர் பரீட்சித்தல் பட்டியல் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை அதிகாரிகளினால் எரிபொருள் வழங்கும் சந்தர்ப்பத்தில் பரீட்சித்துப் பார்த்தல் வேண்டும்.

Safety Checklist

The Master of the BSV and Master of the BRV shall complete the appropriate “Bunker Safety checklists”.

These checklists shall provide adequate level of protection against spillages, leakages, any other unsafe act and unsafe conditions. Model checklists are given in the Appendix 2 Bunker checklist shall be checked by MEPA officers where the bunkering operations to be taken place.

எண்ணெய் வழங்கலுடன் தொடர்புடைய முன் பாதுகாப்பு

General

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேசத் தேவைகள் என்பவற்றின் பிரகாரம் எண்ணெய் வழங்கும் செயற்பாட்டினை மிகவும் பாதுகாப்பான முறையில் திட்டமிட்டுச் செயற்படுத்துதல் வேண்டும்.

எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் கப்பலின் தலைவர் மேலே (3) ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு முறை உட்பட எரிபொருள் வழங்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளதாக உறுதி செய்தல் வேண்டும்.

எரிபொருள் மாற்றும் செயற்பாட்டின் போது குறித்த முழுமையான காலப் பகுதியினுள் நேரடிக் கண்காணிப்பினில் இடைவிடாது மேற்கொண்டதாக எரிபொருள் பெறுகின்ற கப்பல் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.

எரிபொருள் பெறுகின்ற மற்றும் வழங்குகின்ற கப்பல்களின் தலைவர்கள் அனைத்து நீர்க் குழாய் வாயில்களையும் மூடி இருப்பதாகவும் கசிவுகள் ஏற்படும் போது அதனைத் தடுப்பதற்குப் போதிய தடுப்புப் பொருட்கள் காணப்படுவதாகவும் உறுதியளித்தல் வேண்டும்.

எரிபொருள் வழங்கப்படுகின்ற காலப் பகுதியினுள் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் எரிபொருள் வழங்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்துதல் வேண்டும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட செலவினத்திற்கு உட்பட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெறுதல் வேண்டும். அல்லது குறித்த செலவினத்தை ஏற்றுக் கொள்ளப்பட்ட குழாய் உற்பத்தியாளர்களினால் உறுதி செய்தல் வேண்டும். குழாயினைப் பயன்படுத்துகின்ற சேவைகள் மற்றும் தொழிற்பாட்டுத் தன்மைகளுக்குப் பொருத்தமான வகையைப் பயன்படுத்தல் வேண்டும்.

ஆறு மாதத்திற்குக் கூடாத கால எல்லையினுள் குழாயின் ஆய்வு ரீதியான அமுக்கத்தை நாளாந்தம் பரீட்சித்து வருதல் வேண்டும். ஒவ்வொரு குழாயினதும் சேவை வரலாறு பற்றிய அறிக்கையொன்றினையும் பேணி வருதல் வேண்டும்.

எரிபொருள் பெற்றுக் கொள்ளும் கப்பலினால் கடைப்பிடிக்க வேண்டிய முன் பாதுகாப்பு நடவடிக்கைகள்
கப்பல் உரிமையாளர் அதனை ஒப்படைத்த கம்பனியின் B.P. குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளின் பிரகாரம் எண்ணெய் பெற்றுக் கொள்ளும் கப்பலின் தலைவர் பின்வரும் மேலதிக தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
நீர் வெளியேறும் குழாய்களை நன்கு மூடி இருத்தல் வேண்டும்.
கப்பல் நன்கு நங்கூரமிட்டு அல்லது கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
பயன்படுத்தாத எரிபொருள் குழாய்களை உறுதியான முறையில் மூடி இருத்தல் வேண்டும்.
எரிபொருள் வழங்கல் தொடர்பான குழாயின் அமுக்கத் தன்மையினைப் பரீட்சித்து அவற்றினை ஸ்ரென்சில் பண்ணுதல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் குழாய்கள் போதிய (Stencil) காணப்படுதல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் குழாயை நன்கு இறுக்கமாகப் பொருத்தக் கூடியவாறு காணப்படுதல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் குழாய்களின் இணைப்புக்களில் போல்ட் அனைத்தும் நன்கு இறுகக் கூடியவாறு காணப்படுதல் வேண்டும். அந்த போல்ட்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பங்கரானது சர்வதேச வழிகாட்டலின் பிரகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையினை சேர்ந்ததாக இருத்தல் வேண்டும்.
பங்கர் குழாய் இணைப்பிற்கு போதிய பரப்பளவு கொண்ட வெளிப் பாத்திரமொன்று காணப்படுதல் வேண்டும்.
கப்பல் பொருட்களை ஏற்றியிறக்கல் மற்றும் ஏனைய தொழிற்பாடுகள் என்பன பங்கர் செயற்பாட்டின் மூலம் பாதிக்கப்படுவதில்லை. வேறுவிதமாகக் குறிப்பிடின் பங்கர் செயற்பாட்டின் மூலம் கப்பலின் பொருட்களை ஏற்றியிறக்கும் நடவடிக்கைக்குப் பாதிப்பு ஏற்படலாகாது. எண்ணெய் பெற்றுக் கொள்ளும் கப்பல் மற்றும் எரிபொருள் வழங்கும் கப்பல் என்பவற்றுக்கிடையே இணக்கப்பாட்டுடன் கூடிய தொடர்பாடல் முறைமையொன்று காணப்படுதல் வேண்டும்.
பங்கர் எரிபொருள் ஏற்றுகின்ற, எரிபொருள் வழங்குகின்ற மற்றும் நிரப்பும் சந்தர்ப்பங்களில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்ஞை முறைமையொன்றினை நன்கு தெரியக் கூடியவாறு காட்சிப்படுத்தல் வேண்டும். பகல் நேரங்களில் '(B)' அடையாளமுடைய கொடியினை ஏற்றுதல் வேண்டும். கப்பலின் உச்சியில் சிவப்பு நிறத்தால் எரிந்து அணையும் விளக்கு ஒன்று நான்கு திசையிலும் விளங்கக் கூடியவாறு காட்சிப்படுத்தல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் இடத்திலுள்ள கப்பல்கள் எரிபொருள் மூலம் ஏற்படக் கூடிய சூழல் மாசுறலைத் தடுப்பதற்கான அவசர கருவிகள் காணப்படுதல் வேண்டும்.
அமுக்கத்தையளவிடும் கருவியை நன்கு புதுப்பித்து செயற்படக் கூடிய நிலையில் எரிபொருள் வழங்கும் இடத்தில் வைத்திருத்தல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் சந்தர்ப்பத்தில் அதனுடன் தொடர்புடைய பணியாளர்கள் குறித்த இடத்தில் தங்கியிருத்தல் வேண்டும். எரிபொருள் வழங்கும் திட்டத்தை எரிபொருள் நிரப்ப ஆரம்பிப்பதற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது தயாரித்து எரிபொருள் நிரப்பும் பணியாளர்களுடன் அதுபற்றிக் கலந்துரையாடுதல் வேண்டும். பங்கர் தாங்கிகளில் போதிய இடவசதி காணப்படுவதனை கப்பல் தலைவர் உறுதி செய்தல் வேண்டும். எரிபொருள் வழங்கும் இடத்திற்கு அருகில் கப்பலிற்கு எரிபொருள் வழங்கும் செயற்பாட்டினைக் காட்சிப்படுத்தல் வேண்டும்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வேறு முக்கிய அறிவுரைகள் காணப்படின் அதன் பிரகாரம் செயலாற்றுதல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் கப்பலினால் பின்பற்றப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள்
எரிபொருள் வழங்கும் கப்பலின் தலைவரினால் பின்வருவன நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக திருப்தியடையும் வரையில் எரிபொருள் நிரப்பும் பணியினை ஆரம்பித்தலாகாது.
நீர் வெளியேறும் குழாய்கள் நன்கு இறுக்கமாக மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் கப்பல் நன்கு கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
பங்கர் குழாய்கள் நன்கு பராமரிக்கப்பட்டு இயங்கக் கூடிய நிலையில் காணப்படுதல் வேண்டும்.
பங்கர் குழாய்கள் போதியளவு இறுக்கமற்றதாக இருத்தல் வேண்டும்.
சர்வதேச வழிகாட்டலின் பிரகாரம், பங்கர் செயற்பாடானது ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையினைச் சேர்ந்ததாக இருத்தல் வேண்டும்.
பங்கர் இணைப்பானது நன்கு பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
பங்கர் குழாய்களை இணைக்கும் இணைப்புடன் காணப்படுகின்ற அனைத்து போல்ட்களிலும் நன்கு இறுக்கக் கூடிய போல்ட் ஆணியொன்று காணப்படுதல் வேண்டும்.
பங்கர் குழாய்களின் அமுக்கத்தைப் பரீட்சித்து ஸ்ரென்சில் பண்ணுதல் வேண்டும்.
தாங்கி மற்றும் நிரப்பியுடன் தொடர்புபடும் குழாய் மற்றும் வால்வ் என்பவற்றினை நன்கு பொருத்துதல் வேண்டும். எரிபொருள் வழங்கும் கப்பலுடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தொடர்பாடல் முறைமையொன்றினைப் பொருத்துதல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் இடங்களுக்கு அருகாமையில் தீயணைப்பு உபகரணங்கள் போன்ற தேவையான உபகரணங்களை போதியளவில் வைத்திருத்தல் வேண்டும்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் அறிவுறுத்தல்கள் காணப்படின் அவற்றினையும் கடைப்பிடித்தல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் தொழிற்பாட்டிற்கு முன்னர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்
எரிபொருள் நிரப்ப ஆரம்பிப்பதற்கு முன்னர் நிரப்பும் வேகம் எவ்வளவு? என்பதனை எரிபொருள் வழங்குநர் மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்பவர் ஆகிய இருவரும் அறிந்து இணக்கப்பாட்டிற்கு வருதல் வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் மற்றும் பெற்றுக் கொள்ளும் இரு கப்பல்களுக்கிடையிலும் பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் பேணப்படுதல் வேண்டும்.
வோக்கி டோக்கி போன்ற ரேடியோ தொடர்பாடல் உபகரணங்கள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அவை கட்டாயமாகப் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
எரிபொருள் நிரப்புவதனைப் பூர்த்தி செய்த பின்னர் எரிபொருள் நிரப்பும் குழாய் இணைப்பைத் துண்டிக்கும் வரையில் இந்தத் தொடர்பாடல் நிலை காணப்படுதல் வேண்டும்.
உரிய முறையில் எரிபொருள் நிரப்புவதனைப் பரீட்சிப்பதற்கான பட்டியலைப் பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை உரிய முறையில் கடைப்பிடித்தல் வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விசேட நுழைவு முறைகள்
எரிபொருள் நிரப்பும் குழாயில் கசிவுகள் ஏதேனும் காணப்படுகின்றதா என்பதனை தொடர்ச்சியாகப் பரீட்சித்தல் வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் காலப்பகுதி முழுவதும் எரிபொருள் வழங்குகின்ற கப்பல் மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுகின்ற கப்பல் ஆகிய இரண்டினதும் கடமைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர்/கப்பல் பணியாளர்களில் ஒருவர், குறித்த எரிபொருள் நிரப்பும் இடத்தில் இருத்தல் வேண்டும். கசிவு அல்லது சிந்துதல் போன்றன ஏற்படும் பட்சத்தில் எரிபொருள் நிரப்புவதனை உடனடியாக நிறுத்துவதற்குக் கட்டளை பிறப்பிக்க வேண்டி ஏற்படின் அதற்காக மிகவும் சமீபமாக இருத்தல் வேண்டும்.
தாங்கிகளின் எரிபொருள் மட்டத்தினைப் பாதுகாப்பான முறையில் பரீட்சித்தல் வேண்டும். தாங்கிகளை நிரப்பும் போது மிகவும் அவதானமான முறையில் செயற்படல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் செயற்பாடு பூர்த்தியடைந்ததன் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்

எரிபொருள் நிரப்பும் குழாயில் காணப்படும் காற்றினை அகற்றுவதற்கு முன்னர் அவ்வாறு அகற்றப்படும் எண்ணெய்யினை நிரப்புவதற்குத் தேவையான இடவசதி நிரப்பும் தாங்கியில் காணப்படுகின்றமை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எரிபொருள் வழங்கும் கப்பலின் குழாய்களை எண்ணெய் சிந்தும் விதத்தில் துண்டித்தலாகாது. கொள்ளளவினை நன்கு அடையாளமிடப்பட்டுள்ள பாத்திரமொன்றினை இதற்காகப் பயன்படுத்துதல் வேண்டும். எரிபொருள் நிரப்பும் குழாயினை உரிய கப்பலுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர் நன்கு மூடியிருத்தல் வேண்டும். மூடிய இடத்தினை மீண்டும் பொருத்தும் போது புதிய காஸ்கட் மற்றும் போல்ட் ஆணி என்பன முழுமையாக பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

எண்ணெய்க் கசிவு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள்

கப்பல்களில் எண்ணெய் மூலம் ஏற்படக் கூடிய மாசடைவினைத் தடுப்பதற்காக (Shipboard Oil Pollution Emergency Plans) அவசர திட்டங்களின் பிரகாரம் எண்ணெய்க் கசிவு ஒன்று ஏற்படும் போது அதனைத் தடுப்பதற்குத் தேவையான சகல உபகரணங்களும் எரிபொருள் வழங்கும் ஒவ்வொரு கப்பலிலும் காணப்படுதல் வேண்டும். அவ்வாறு காணப்படும் உபகரணங்களில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையினால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் போதியளவில் இருத்தல் வேண்டும். மேலும் மீளப் பயன்படுத்தக் கூடிய உயர்தரம் மிக்க கசிவினை அடைப்பதற்குத் தேவையான பொருட்கள் போதியளவில் காணப்படுதல் வேண்டும். பயன்படுத்தியதன் பின்னர் அகற்றுவதற்கும், சுத்தம் செய்வதற்கும் பொருட்கள் போதிய அளவில் காணப்படுதல் வேண்டும்.
எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் கப்பலுக்கு முன்புறமாகவும் பின்புறமாகவும் ஆபத்துக்கள் ஏற்படாதவாறு தடுப்பதற்கான மிதப்பிகள் எரிபொருள் நிரப்பும் கப்பலில் காணப்படுதல் வேண்டும்.

எண்ணெய்க் கசிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்

எண்ணெய்க் கசிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகப் பின்வரும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் பணி உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் கப்பல் மற்றும் பெற்றுக் கொள்ளும் கப்பல் என்பவற்றின் வால்வுகள் நன்கு மூடப்படுதல் வேண்டும்.
எரிபொருள் வழங்கும் கப்பலுக்குப் பொறுப்பான அதிகாரியினால் இந்நிலை தொடர்பாகக் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபைக்கும், துறைமுக எல்லையினுள் இடம்பெறுமாயின் துறைமுக தலைவருக்கு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கும் அறிவித்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்டவை தொடர்பாக அறிவிக்கும் போது பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
கசிவு ஏற்பட்ட இடம் மற்றும் நேரம்
எரிபொருள் பெற்றுக் கொள்ளும் கப்பலின் பெயர்.
நிகழ்வின் தன்மை
நீரில் அல்லது கப்பல் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் சிந்தியுள்ள எண்ணெயின் அளவு மற்றும் வகை.
பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய வளங்கள்.
தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய விதம் பற்றிய தகவல்கள்.
சம்பவம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தொடர்பு கொள்ளக் கூடிய நபர்.
கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்.
கசிவு தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ள நடவடிக்கைகள்

எண்ணெய்க் கசிவுத் தடுப்புத் திட்டத்தை அமுல்படுத்தவும். கப்பலின் தட்டில் அல்லது நங்கூரமிடப்பட்டுள்ள இடத்தில் சிந்தியுள்ள எண்ணெய் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மேலும் அதனை சுத்தம் செய்வதற்குத் தேவையான சகல பொருட்களையும் பயன்படுத்துதல் வேண்டும்.

சுத்தம் செய்யும் போது ஒன்று சேர்க்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ள முறைப்படி மேற்கொள்ளல் வேண்டும்.

பங்கர் செயற்பாட்டினை கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையினால் பின்னூட்டல் செய்தல்.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் விருப்பத்தின் பிரகாரம், அந்த அதிகார சபையின் அதிகாரிகள் அல்லது அதனால் பெயர் குறிப்பிடப்படும் நபர் ஒருவர் சகல் பங்கர் தொழிற்பாடுகள் தொடர்பாகவும் நாளாந்தம் பின்னூட்டல் நடவடிக்கையில் ஈடுபடுதல் வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் அல்லது கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை அதிகாரிகளினால் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் பங்கர் தொழிற்பாடு பற்றிய தேவையான ஆவணங்கள், பரீட்சித்தல், கண்காணித்தல், பராமரிப்பு மற்றும் தொழிற்பாடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட சகல ஆவணங்களும் அனைத்து பங்கர் வழங்குநர்களினாலும் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

1.2 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகளிடம் பெற்றுக் கொடுப்பதனை மறுதலிக்கும் பட்சத்தில் அனைத்துவித பங்கர் தொழிற்பாடுகளும் உடனடியாக இடைநிறுத்தப்படுவதுடன் மீண்டும் அந்தத் தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

அதிகார சபையின் பிரதிநிதி ஒருவர் வருகை தந்துள்ள போதிலும், பங்கர் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற பணியாளர்களுக்கு எக்காரணம் கொண்டும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட முடியாது.

மேற்குறிப்பிட்ட எரிபொருள் வழங்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில், அதற்குரிய தண்டனையொன்றினை வழங்குவதற்கு அதிகார சபைக்கு அதிகாரமுண்டு.

பிற்சேர்க்கை

பிற்சேர்க்கை 1: பன்க்கர் அறிவித்தல் படிவம்

பிற்சேர்க்கை 2: கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய் வழங்குவதற்கான பாதுகாப்பு தேர்வாய்வுப் பட்டியல்

Last Updated ( Friday, 21 June 2013 10:47 )  

செய்திகளும் சம்பவங்களும்

Official Launching of Glo Fouling Partnerships project held at IMO Head quarters Official Launching of Glo Fouling Partnerships project held at IMO Head quarters, London on 25th October 2018, with the participation of Lea... மேலும்
4th National Symposium - 2018 4th National Symposium on Marine Environment organized by Marine Environment Protection Authority was held on 20th October 2018 at BMICH ... மேலும்
Expert Dialogue Forum - 2018 Expert Dialogue Forum on Marine Environment organized by Marine Environment Protection Authority(MEPA) was held on 19th October 2018 at BMIC... மேலும்
MEPA New Regional Building at Galle Marine Environment Protection Authority opens New Regional Building at Galle   ... மேலும்
International Coastal Cleanup Day 2018   International Coastal Cleanup Day and Marine Resources Conservation Week ----2018   ... மேலும்
Workshop and Training Drill in Puttalam District පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කඩොලාන සහිත කලපු පරිසරය හා සයුර තුළ හදිසි තෙල් හෝ රසායනික ද්‍රව්‍ය විසිරීමකදී ක්‍රියාකළ යුතු ආකාරය පිළිබද රාජ්‍ය නිළ... மேலும்
World Oceans day, special three days workshop "ප්ලාස්ටික් මගින් සිදුවන පරිසර දූෂණය වැළැක්වීම සහ පිවිතුරු සයුරක් සදහා විසදුම් දිරිමත් කිරීම" යන තේමාව යටතේ ජුනි මස 08වනදින සැමරීමට නියමිත ජ... மேலும்
Three days Workshop on Oil Spill Contingency Plan ශ්‍රී ලංකාව වටා මුහුදු තීරයේ සිදුවන ඕනෑම හදිසි තෙල් විසිරුමකට හෝ රසායනික දුව්‍ය විසිරුමකට මුහුණ දීම සදහා අප අධිකාරියේ ක්ෂේත්‍ර සහකාරවරු පුහු... மேலும்
Deputy Minister of Environment Hon Ajith Mannapperuma visited at MEPA පරිසර නියෝජ්‍ය අමාත්‍ය ගරු අජිත් මාන්නප්පෙරුම මැතිතුමා පසුගිය දින අප අධිකාරියට පැමිණ කළමනාකාරීත්වය සහ සේවක මඩුල්ල සමග විශේෂ සාකච්ඡාවක නිරත ව... மேலும்
Concurrent to World Earth Day ජගත් මිහිකත දිනයට සමගාමීව අප අධිකාරිය, SLYCAN TRUSTසංවිධානය ,ගල්කිස්ස හෝටලය ඇතුළු තවත් ස්වෙච්ඡා සංවිධාන රැසකගේ දායකත්වයෙන් විශේෂ වෙරළ පිරිසි... மேலும்
Laboratory Service Laboratory Service Coming Soon மேலும்
Awareness Boards in jaffna Jaffna Placing Awareness Boards in jaffna coastal zones (Chartty beach , Gurunagar, Pannai, Navanthurai on 21.12.2017 ) ... மேலும்