MARPOL என்பதன் மூலம் குறிப்பிடப்படுவது கடலில் கப்பல் மூலம் ஏற்படுகின்ற மாசடைதல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச நியதிச் சட்டமாகும். இச் சர்வதேசச் சட்டமானது கடல்களுக்கு இடையிலான அமைப்பினால் 1973 ஆம் ஆண்டிலே நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் எண்ணெய்க் கப்பல்கள் சில அடிக்கடி திடீர் விபத்துகளுக்கு உள்ளானமை காரணமாக அது 1978 ஆம் ஆண்டிலே இற்றைப்படுத்தப்பட்டது.
திடீர் விபத்துக்களின் போது ஏற்படுகின்ற மாசடைதல் மற்றும் சாதாரண தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற மாசடைதல் உட்பட கப்பல்களின் மூலம் ஏற்படுகின்ற மாசடைதல் போன்றவற்றினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் என்பவற்றினை நோக்காகக் கொண்ட ஒழுங்கு விதிகள் இந்நியதிச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தற்போது MARPOL 73/78 நியதிச் சட்டத்தில் 06 தொழில்நுட்ப இணைப்புக்கள் காணப்படுகின்றன.
இணைப்புக்கள் | ||
01. | எண்ணெய் மூலம் ஏற்படுகின்ற மாசடைதலை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகள். | |
02. | அதிகமான சேதப்படுத்தக் கூடிய பொருட்கள் காரணமாக ஏற்படக் கூடிய மாசடைதல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகள். | |
03. | பொதியில் அடைந்து கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படுகின்ற சேதப் பொருட்கள் மூலம் ஏற்படக் கூடிய தீங்குகளைத் தடுத்தல். | |
04. | கப்பல்கள் மூலம் வெளியேற்றப்படுகின்ற மலசலங்கள் மூலம் ஏற்படக் கூடிய மாசடைவுகளைத் தடுத்தல். | |
05. | கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்கள் மூலம் ஏற்படக் கூடிய மாசடைதலைத் தடுத்தல். | |
06. | கப்பல்கள் மூலம் ஏற்படக் கூடிய வளி மாசடைதலைத் தடுத்தல். |
பங்கேற்கும் சகல நாடுகளும் MARPOL ஒழுங்கு விதிகளைத் தமது தேசிய சட்டக் கோவையில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்கின்றன. பொருத்தமாகக் காணப்படுமாயின், MARPOL ஒழுங்கு விதிகளை மீறுவோரைக் கைது செய்து தடுத்து வைப்பதற்குத் தேவையானவாறு சட்டத்தைப் பலப்படுத்துவதற்கான நிறுவனமொன்று அனைத்து நாடுகளிலும் உள்ளது.
MARPOL நியதிச் சட்டத்தில் கைச்சாத்திட்ட அனைத்து நாடுகளும் MARPOL ஒழுங்கு விதிகளை பின்பற்றுகின்றன.
கப்பல்களின் மூலம் ஏற்படக் கூடிய மாசடைதலைத் தடுப்பதற்கான சர்வதேச இணக்கப்பாட்டின் பிரகாரம் 73/78 (MARPOL 73/78) உடன் தொடர்புடைய ஒரு பகுதியாக, பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் கப்பல் திருத்தப் பணிகளின் போது கப்பலிலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களை முறைப்படி மீள் உற்பத்தி செய்யும் பணியே கழிவுப் பொருள் மீள் உற்பத்தி சேவை எனப்படும்.
அதிக தாமதம் ஏற்படாதவாறு, கப்பல்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் துறைமுகங்களில் மீள் உற்பத்தி வசதிகளை வழங்குவதனை அங்கத்துவ நாடுகள் உறுதி செய்தல் வேண்டும். இந்த வசதிகள் குறித்த துறைமுகத்தின் பரப்பளவு மற்றும் அத்துறைமுகத்திற்கு வருகைத் தருகின்ற கப்பல்களுக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்படல் வேண்டும்.
யாதேனுமொரு கப்பல் (மீன்பிடி படகுகள் மற்றும் 12 பேருக்கு மேற்பட்ட பயணிகளை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்ட படகுகள் தவிர்ந்த) பிறப்பிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை இறுதியாக வெளியேற்றிய துறைமுகமும் திகதியும், தற்போது கப்பலில் வெளியேற்றுவதற்குள்ள கழிவுப் பொருட்களின் அளவு, அக்கப்பல் வந்தடையும் துறைமுகத்திற்கு கப்பல் தலைவரினால் அறிவித்தல் வேண்டும்.
கப்பலில் காணப்படும் கொள்ளளவினை போதியதாக நிரூபிக்க முடியாத சந்தர்ப்பங்களில், பிற காரணங்களினால் இப்பொறுப்பிலிருந்து விடுவித்து இல்லாத சந்தர்ப்பங்களில், அனைத்துக் கப்பல்களும் சமூகத் துறைமுகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கப்பலில் பிறப்பிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை அத்துறைமுகத்தில் அகற்றுவதற்கு ஒப்படைத்தல் வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு போதிய காரணங்களை முன்வைக்காத பட்சத்தில், கழிவுப் பொருட்களை அகற்றாது துறைமுகத்திலிருந்து வெளியேறுவதற்கு கப்பல்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.